1000 ரூபா வேதன உயர்வு வர்த்தமானியை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

1000 ரூபா வேதன உயர்வு வர்த்தமானியை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதிவரையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மீள பிற்போட்டுள்ளது.

20 பெருந்தோட்ட நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி அர்ஜூன ஒபேசேகர மற்றும் நீதிபதி மயாதுன்னே கொறயா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனுமீதான விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் பிற்போடுவதற்கு நீதிபதிகள் ஆயம் தீர்மானித்ததாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்