சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்தி சென்ற நபர் கைது!

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்தி சென்ற நபர் கைது!

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்தி சென்ற ஒருவர் வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது மரக்கடத்தலுக்காக சந்தேகநபர் பயன்படுத்திய வாகனமும், மரக்குற்றிகளும் காவற்துறையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்