
ஊவா மாகாணத்தில் அபாயமிக்க வீதிகளை சீரமைக்குமாறு ஆலோசனை!
ஊவா மாகாணத்தில் அவதானமிக்க வீதிகளை அடையாளம் கண்டு அவற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசம்மில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
14 பேரின் உயிரை காவு கொண்ட பசறை 13 ஆம் கட்டை பேருந்து விபத்தின் பின்னர் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி வேக கட்டுப்பாடு மற்றும் அவதானமிக்க வீதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி பேருந்து விபத்துக்குள்ளான பசறை - 13 ஆம் கட்டை பகுதியில் அண்மையில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது