விசாரணைக்காகச் சென்ற பொலிஸ் ஜீப் வண்டி மீது தாக்குதல்! பொலிஸ் அதிகாரி படுகாயம்
குளியாபிட்டி - தலஹிடிமுல்ல பகுதியில் உள்ள வீட்டுக்கு விசாரணைக்காக சென்ற பொலிஸ் ஜீப் வண்டி மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மார்ச் 23 அன்று இரவு 9.00 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் ஜீப் வண்டியின் கதவு மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன. மேலும் இதில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்துள்ளதாக குளியாபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி வசந்த (56309) காயமடைந்து குளியாபிட்டி அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பான சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குளியாபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.