
திருகோணமலை - ஹபரண வீதியில் விபத்து
திருகோணமலை - ஹபரண பிரதான வீதியில், ஹபரண- ஹதரஸ்கொட்டுவ பகுதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (25) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரே இன்று (25) மாலை விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது குறித்த பவுஸரில் 19, 800 லீட்டர் பெற்றோல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும்,
பவுசர் விபத்துக்குள்ளானதால் எரிபொருள் கசியத் தொடங்கியதை அயடுத்து எரிபொருள் வேறு வாகனத்திற்கு மாற்றியதாகவும் இதனால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பவுஸரின் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன மற்றும் ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.