சட்டவிரோதமாக குடிநீர் பெறுவோர் தொடர்பில் தகவல் வழங்கினால் சன்மானம்

சட்டவிரோதமாக குடிநீர் பெறுவோர் தொடர்பில் தகவல் வழங்கினால் சன்மானம்

சட்டவிரோதமான முறையில் குடிநீரைப் பெற்றுக்கொண்டுள்ள நபர்களையும், இடங்களையும் கண்டறிவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் அந்த சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

முறையற்ற விதத்தில் குடிநீரைப் பெற்றுக்கொண்டுள்ளவர்கள் குறித்து தகவல் வழங்குவோருக்கு, ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், சட்டவிரோமான முறையில் குடிநீரைப் பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு, நீதிமன்றத்தினால் விதிக்கப்படும் அபராதத்தை மேலும் அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது.

முறையற்ற விதத்தில் குடிநீரைப் பெற்றுக்கொண்டுள்ளமையை, தகவல் தொழில்நுட்பம் ஊடாக கண்டறியும் வேலைத்திட்டமும், தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது