முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று

முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று

இலங்கை அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின், இறுதிநாள் ஆட்டம் இன்று இடமபெறவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளின் நோர்த் சவுண்டில் இடம்பெறும் இந்தப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு, 375 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவின்போது, தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒரு விக்கட்டை இழந்து 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணி, தமது முதல் இன்னிங்ஸில், 271 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில், 169 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இரண்டாம் இன்னிங்ஸில், சகல விக்கட்டுக்களையும் இழந்து 476 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது.

துடுப்பாட்டத்தில், பெத்தும் நிஸ்ஸங்க அதிகூடுதலாக 103 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்