உருத்திரபுரம் சிவாலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

உருத்திரபுரம் சிவாலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவாலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்பொருள் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன.

உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க இன்றைய தினம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில், எவ்வித அகழ்வுப் பணிகளையும் முன்னெடுக்கக்கூடாது எனத் தெரிவித்து, உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருதரப்பினருடன் கலந்துரையாடிதன் பின்னர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அகழ்வு பணிகளை கைவிட்டு அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மேலதிக விசாரணை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நிறைவடையும்வரை, உருத்திரபுரம் பகுதியில் எந்தவொரு அகழ்வுப் பணியும் இடம்பெறமாட்டாது என காவல்துறையினர் வாக்குறுதி வழங்கியதாக கிளிநொச்சி சின்மயா மிசனின் சிவேந்திர சைதன்யா சுவாமி தெரிவித்துள்ளார்.