சுத்திகரிக்கப்படாத பெருந்தொகையான தேங்காய் எண்ணெய் கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிப்பு

சுத்திகரிக்கப்படாத பெருந்தொகையான தேங்காய் எண்ணெய் கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட, சுத்திகரிக்கப்படாத 8 ஆயிரத்து 300 மெற்றிக் டொன் தேங்காய் எண்ணெய், கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்தத் தகவலும் வெளியாகியுள்ளது.

பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று முதல் முறையாக இந்த தகவலை வெளியிட்டது.

அது குறித்து, சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவினரிடம் எமது செய்திச் சேவை நேற்று வினவியபோது, அந்த தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான பின்னணியில், இறக்குமதி செய்யப்பட்ட, சுத்திகரிக்கப்படாத மேலும் ஒரு தொகை தேங்காய் எண்ணெய், கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக்க டி சில்வா எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.