விகாராதிபதி விகாரைக்கு அருகிலேயே சடலமாக மீட்கப்பட்டார்...!
கடந்த இரு தினங்களாக காணாமல் போயிருந்த பௌத்த பிக்கு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திக்வெல்ல நில்வெல்ல மினிகிருல விகாரையின் விகாராதிபதி மூடகமுவே சுமிந்த தேரர் கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
குறித்த தேரர் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்ததாகவும், விவசாய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக அவர் தனது பயிர் நிலத்தை பார்வையிட சென்றுள்ளார்.
தனது பயிர்நிலத்தை பார்வையிட சென்ற தேரர் பின்னர் தன்னடை வாசஸ்தலமான விகாரைக்கு திரும்பவில்லை.
பிரதேசவாசிகள் காவல் துறையினர் என அனைவரும் தேடி வந்த நிலையில், இன்றைய தினம் விகாரைக்கு அருகில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த தேரர் தனது பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அமைத்திருந்த மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்கப்பட்ட பொளத்த பிக்குவின் சடலத்திற்குரிய இறுதி சடங்குகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.