வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தெரிவிப்பு

வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தெரிவிப்பு

உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட அளவினை விட கொழும்பு மற்றும் கண்டி நகரங்களின் எல்லைக்குள் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை வைத்திய சபையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களிலும் வளி மாசடைதல் அதிகரிக்கும் அவதானம் காணப்படுவதாகவும் இதனை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்