ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பெரும்பான்மை இல்லை - தினேஷ் குணவர்தன

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பெரும்பான்மை இல்லை - தினேஷ் குணவர்தன

இலங்கை தொடர்பாக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்த பிரேரணை தொடர்பான ஜெனீவா வாக்கெடுப்பின் பின்னர், கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய செயற்பாடானது, இலங்கைக்கு மாத்திரமின்றி உலகில் பொருளாதார இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ள நாடுகளை நிர்வகிக்க முடியும் என சிந்திக்கும் நாடுகளுக்கு இது பாடமாக அமைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

47 உறுப்பு நாடுகளில், 25 நாடுகளது அனுமதி இந்த பிரேரணைக்கு கிடைக்கவில்லை எனவும், இதன் ஊடாக வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்த நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளமை புலப்படுவதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்