ஆர்ப்பாட்ட பேரணி நிதியமைச்சு கட்டடத்தை அண்மித்துள்ளது!

ஆர்ப்பாட்ட பேரணி நிதியமைச்சு கட்டடத்தை அண்மித்துள்ளது!

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்ட பேரணி தற்போது நிதியமைச்சு கட்டடத்துக்கு அருகில் வந்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் வேதனத்தை 15 ஆயிரத்தினால் அதிகரித்தல் மற்றும் தனியார் துறையின் அடிப்படை சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகிலிருந்து இந்தப் பேரணி ஆரம்பமானது.

இதன்காரணமாக கொழும்பு நகரமண்டபத்தை அண்மித்த பகுதியிலுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

தற்போது, தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலர் நிதியமைச்சுக்கு பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இப்போட்டியில் ஆட்டநாயகனாக டொம் லதம் தெரிவானார்