கடந்த 81 நாட்களில் வாகன விபத்துக்களால் 508 பேர் மரணம்

கடந்த 81 நாட்களில் வாகன விபத்துக்களால் 508 பேர் மரணம்

இந்த வருடத்தின் கடந்த 81 நாட்களில் வாகன விபத்துக்களால் 508 பேர் உயிரிழந்தனர்.

483 விபத்துக்களால் இவர்கள் மரணித்ததாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் குறித்த காலப்பகுதியில் ஆயிரத்து 54 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 2 ஆயிரத்து 488 பேர் காயமடைந்தனர்.

அத்துடன் வாகன விபத்துக்களால் ஆயிரத்து 284 சொத்துக்களும் சேதடைந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது