புற்றுநோய் ஏற்படக் கூடிய இரசாயனங்கள் அடங்கிய தேங்காய் எண்ணெய் நாடுமுழுவதும்?
பண்டிகை காலத்திற்கு முன்னர் சந்தையில் மற்றும் சுங்கத்திடம் உள்ள இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்காத தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மனித பாவனைக்கு உகந்ததா? இல்லையா? என்பது தொடர்பில் ஆய்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.
நாட்டில் பாரம்பரியமாக தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
சுங்கத்தில் இருந்த 13 கொள்கலன்களிலுள்ள தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் ஏற்படக் கூடிய அப்லடொக்சின்ஸ் என்ற இரசாயனங்கள் அடங்கியிருந்ததாக அந்த சங்கத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், இதே தொகுதியை கொண்ட எண்ணெய்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது எவருக்கும் தெரியாது.
எனவே அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாட்டில் பாரம்பரியமாக தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா கோரியுள்ளார்