முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் - யுவதி உயிரிழப்பு

முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் - யுவதி உயிரிழப்பு

முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தால் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

தலாவகலை − டேவோன் பகுதியில் இன்றுகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை−பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி மருந்துகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக பாரவூர்தியும், கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் 25 வயதான கணேஷன் நித்யா என்ற யுவதி உயிரிழந்ததுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்த யுவதியின் சடலம், கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், முச்சக்கரவண்டி சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ளை−பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்