யாழ்ப்பாணத்தில் 7 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 7 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

7 கோடி 19 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணி பிரதேசத்தில் இன்று (22) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 239 கிலோ 850 கிராம் கேரள கஞ்சா டிப்பர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 34 வயதுடைய வெற்றிலைக்கேணி மற்றும் ஆழியவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் மற்றும் கையகப்படுத்தப்பட்ட கேரள கஞ்சா தொகை ஆகியவற்றோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்