பசறையில் மீண்டுமொரு கோர விபத்து! ஸ்தலத்திலே பலியான பெண்

பசறையில் மீண்டுமொரு கோர விபத்து! ஸ்தலத்திலே பலியான பெண்

பசறை மூன்றாம் கட்டை தொலம்பவத்த பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறியொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியின் சாரதி உள்ளிட்ட இருவர் காயங்களுடன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், விபத்துக்குள்ளான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பசறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.