தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 6 பேர் கைது
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 6 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
இதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 3,381 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் தனிமைப்படுத்தல் தொடர்பான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
எதிர்வரும் பண்டிகை காலங்களை அனைவரும் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்