கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில்

கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில்

நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியான 354 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவல் தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு நேற்று தொற்றுறுதியானது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 58 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 17 பேருக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளில் 70 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 12 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொட கொத்தணிகளுடன் தொடர்புடைய 86 ஆயிரத்து 132 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்களில் 85 ஆயிரத்து 359 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரையில் நாட்டில் 90 ஆயிரத்து 199 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்களில் 86 ஆயிரத்து 758 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்றுறுதியான 2 ஆயிரத்து 895 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை முப்படையினரின் கீழ் முன்னெடுத்து செல்லப்படும் 93 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 9 ஆயிரத்து 358 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்றைய தினம் 6 ஆயிரத்து 832 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன