கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரத்த தானம் செய்யமுடியுமா?

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரத்த தானம் செய்யமுடியுமா?

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரத்ததானம் செய்யலாமா என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனவே, இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அல்லது செலுத்திக் கொண்டவர்கள் இரத்ததானம் செய்ய கூடிய சாத்தியம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரடண்சிங்கம் விளக்கம் அளிக்கையில், இலங்கையை பொருத்தவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரு வாரங்களுக்கு இரத்த தானம் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில், தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பின்னர் உடலில் பிறப்பொருளெதிரி (Antibody)) உருவாகும்போது குறித்த இரு வாரங்களுக்குள் உடலில் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன.

இதனால் இரத்ததானம் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது. எனினும், அவசர நிலைமையொன்றின்போது இரத்ததானம் செய்யவேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை உருவாகின்றபோது, இரத்த வங்கியிலுள்ள வைத்தியர்களின் ஆலோசனைகளை பெற்று இரத்ததானம் செய்யவது சிறந்தது. இரத்ததானம் செய்யக்கூடாது என்ற எவ்வித கட்டாயமும் இல்லை.

முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பின்னர் ஏற்படும் விளைவுகளான காய்ச்சல், உடல்வலி என்பன இல்லாது போவதற்கு ஆகக்கூடியது இரண்டு வாரங்கள் வரை தேவைப்படும். எனவே தான் இருவாரங்கள் இரத்தானம் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது.

சாதாரணமாக சுகதேகி ஒருவர், இரத்தானம் செய்யக்கூடிய இயலுமைகளை கொண்டிருப்பாராயின் அவர் இரத்ததானம் செய்யலாம். தடுப்பூசி ஏற்றிக்கொண்டார் என்பதற்காக, ஒருவர் இரத்ததானம் செய்யக்கூடாது என்ற நிபந்தனைகள் எவையும் இல்லை என வைத்தியர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையை பொருத்தவரையில் முதல் தடுப்பூசி செலுத்தி, 10 வாரங்கள் கழிந்த பின்னரே இரண்டாவது தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்ப 8 – 12 வாரங்களாக மாறக்ககூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்