சட்டவிரோதமாக துப்பாக்கியொன்றினை தம்வசம் வைத்திருந்த நபர் கைது

சட்டவிரோதமாக துப்பாக்கியொன்றினை தம்வசம் வைத்திருந்த நபர் கைது

மட்டக்களப்பு, வவுணதீவு - காந்திநகர் பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கியினை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதானவரை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது