இரு தாதியர்களை வைத்தியசாலை கதிரியக்க அறையொன்றில் அடைத்து வைத்த நபர் கைது!
தாம் சுமார் ஒரு மணித்தியாலமாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் கதிரியக்க அறையில் வைத்து பூட்டப்பட்டிருந்ததாக அவ்வைத்தியசாலையில் பணியாற்றிவரும் தாதியர்கள் இருவர் மஹரகம காவல் நிலையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் மூலமான மஹரகம வைத்தியசாலையில் பணியாற்றிவரும் கதிரியக்க பிரிவைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களில் ஒருவர் நேற்று (21) கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று(22) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மற்றைய சந்தேகநபரை தேடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதான காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்