அதி வணக்கத்திற்குரிய கொட்டுகொட தம்மவாச தேரர் காலமானார்

அதி வணக்கத்திற்குரிய கொட்டுகொட தம்மவாச தேரர் காலமானார்

இலங்கையின் மகாநாயக்க அமரபுர பீடத்தின், அதி வணக்கத்திற்குரிய கொட்டுகொட தம்மவாச தேரர் காலமானார்.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 88 வயதில் இன்று உயிரிழந்தார்.

பர்மியா அரசாங்கத்தால் 2007 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி மியான்மரின் ஸ்வர்ணகுகையில் அவருக்கு "அக்கமஹா பண்டித" என்ற விருது வழங்கப்பட்டது.

இவர் மே 2017 இல் அவர் அமரபுர பீடத்தின் மகாநாயக தேரராக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது