438 நாட்கள் விண்ணில் கழித்த சோவியத் விண்வெளி வீரர் வலேரி போல்யாகோவ் பூமிக்கு திரும்பினார் (1995, மார்ச் 22)

438 நாட்கள் விண்ணில் கழித்த சோவியத் விண்வெளி வீரர் வலேரி போல்யாகோவ் பூமிக்கு திரும்பினார் (1995, மார்ச் 22)

ரஷ்யாவின் புகழ்பெற்ற விண்வெளி வீரர் வலேரி விளாடிமிரோவிச் போல்யாகோவ். 1942ம் ஆண்டு ரஷ்யாவின் தூலா நகரில் பிறந்த இவர், வலேரி தூலாவில் தனது ஆரம்பக் கல்வியை 1959 இல் முடித்து மாஸ்கோவில் முதலாம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப்

 

ரஷ்யாவின் புகழ்பெற்ற விண்வெளி வீரர் வலேரி விளாடிமிரோவிச் போல்யாகோவ். 1942ம் ஆண்டு ரஷ்யாவின் தூலா நகரில் பிறந்த இவர், வலேரி தூலாவில் தனது ஆரம்பக் கல்வியை 1959 இல் முடித்து மாஸ்கோவில் முதலாம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் வானியல் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார். 1972ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி விண்வெளிப் பயணத்துக்காக மூன்றாம் மருத்துவப் பிரிவில் சேர்க்கப்பட்டு விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

1994ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை தொடங்கினார். பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு 438 நாட்களை வெற்றிகரமாக விண்ணில் கழித்த அவர், 1995 மார்ச் 22ம் தேதி பூமிக்கு திரும்பினார். மிர் விண்கலத்தில் மருத்துவ விண்வெளி வீரராக 14 மாதங்களுக்கு மேலாக ஒரே பயணத்தில் விண்ணில் காலம் கழித்து சாதனை புரிந்தார். இதன்மூலம் மனித விண்வெளி வரலாற்றில் இவரே அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

 


இவரது மொத்த விண்வெளிக் காலம் 22 மாதங்களாகும். பல்வேறு பயணங்களில் மொத்தம் 678 நாட்கள் விண்ணில் கழித்த போல்யாகோவ், 1995ம் ஆண்டு ஜூன் 1-ல் ஓய்வு பெற்றார். விண்வெளி சாதனைகளுக்காக பல்வேறு விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.