காணி மோசடி- வன அழிப்புகளை நிறுத்த ரகசிய காவல்துறையினரை உட்படுத்த வேண்டும் - மஹிந்த அமரவீர (காணொளி)

காணி மோசடி- வன அழிப்புகளை நிறுத்த ரகசிய காவல்துறையினரை உட்படுத்த வேண்டும் - மஹிந்த அமரவீர (காணொளி)

காணி மோசடி மற்றும் வன அழிப்பு என்பவற்றை நிறுத்துவதற்காக ரகசிய காவல்துறையினரை உட்படுத்த வேண்டும் என தாம் யோசனை முன்வைப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுற்றாடல் அழிப்புகள் தொடர்பாகவே ஊடகங்களில் தற்போது அதிகளவில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

காடழிப்புகள் இடம்பெறுகின்ற போதிலும் அவை அனைத்தும் இந்த ஆண்டு ஆரம்பித்ததென கூற முடியாது.

இவ்வாறான காணி மோசடிகளை தடுப்பதற்கு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

எனவே, இது தொடர்பில் ரகசிய காவல்துறையினருக்கு அறிவித்து வேறாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவ்வாறான செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்