சிரமதான பணிகளில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவரின் தந்தை பாடசாலை கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து மரணம்

சிரமதான பணிகளில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவரின் தந்தை பாடசாலை கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து மரணம்

கேகாலை - ஹெட்டிமுல்ல - பண்டாரநாயக்க மகா வித்தியாலயத்தில் சிரமதான பணிகளில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவரின் தந்தை மூன்று மாடி பாடசாலை கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தார்.

குறித்த பாடசாலையின் கட்டிடத்தை சீரமைக்க பெற்றோர்கள் இன்றைய தினம் சிரமதான பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த நபர் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் ஹெட்டிமுல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளில் தந்தையே உயிரிழந்தார்