
பாகிஸ்தான் குடியரசு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சவேந்திர சில்வா
பாகிஸ்தான் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக இணைந்து கொள்வதற்காக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் குடியரசு தினத்துக்காக அழைப்பு விடுக்கப்பட்ட முதல் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஆவார்.
பாகிஸ்தானின் 81ஆவது குடியரசு தின நிகழ்வுகள் எதிர்வரும் 23ஆம் திகதி நடத்தப்பட உள்ளது.
இதற்காக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பாகிஸ்தான் சென்றுள்ளதுடன்,அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.