தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
நல்லூர், மூதூர் எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி (வயது -46) எனவும் ஆரம்ப கட்ட விசாரணைமூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
ஆடு மேய்ப்பதற்காக குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன் தாயுடன் அப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரியவருவதுடன் குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருவதுடன் இது கொலையா? தற்கொலையா? என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.