நாட்டில் நேற்று 349 கொரோனா தொற்றாளர்கள் பதிவு!

நாட்டில் நேற்று 349 கொரோனா தொற்றாளர்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் 349 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 323 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியில் 23 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 846 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆயிரத்து 835 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 239 பேர் நேற்று குணமடைந்ததாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது.

அனைத்துலக ரீதியிலான கொவிட்-19 பரவல் நாடுகளின் பட்டியலில், சீனாவுக்கு அடுத்த இடத்தில் இலங்கை பதிவாகியுள்ளது

சீனாவில் 90 ஆயிரத்து 87 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, அனைத்துலக ரீதியிலான கொவிட்-19 பரவல் பட்டியலில் 87வது இடத்தில் சீனா பதிவாகி உள்ளது.

இதையடுத்து 88வது இடத்தில் இலங்கை பதிவாகியிருக்கின்றது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய நாளில் ஒரு கொவிட்-19 மரணம் பதிவானது.

பூவெலிகடை பகுதியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர், கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி மரணித்தார்.

கொவிட் நியூமோனியா நிலையே அவரின் மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 545 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது