கொரோனா பரிசோதனை முறைமையை புதுப்பிக்க வேண்டும்-ரவி குமுதேஷ்

கொரோனா பரிசோதனை முறைமையை புதுப்பிக்க வேண்டும்-ரவி குமுதேஷ்

கொரோனா பரிசோதனை முறைமையை புதுப்பிக்க வேண்டும் என இரசாயன பகுப்பாய்வு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை முறைமை மூலம், கண்டறிய முடியாத புதிய கொரோனா வைரஸ் சில நாடுகளில் பரவுகின்றது.

எனவே, பரிசோதனை முறைமையை புதுப்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்