பசறையில் இடம்பெற்ற கோரா விபத்து- பதுளை வைத்தியசாலை பொதுமக்களிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!
பதுளை பசறையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 9 ஆண்களும், 6 பெண்களும் பலியாகியுள்ளதுடன் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவும் 9 பேருக்கு சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது.
இந்நிலையில் உடனடியாக இரத்தம் தேவைப்படுவதால் இரத்தம் கொடுக்க விரும்புவோர் பதுளை வைத்தியசாலைக்கு சென்று இரத்த தானம் வழங்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்க விடுத்துள்ளது.
இதேவேளை பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 15,000 ரூபாய் நிதியை உடன் வழங்க செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஊவா மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கான நிதி உதவியைச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான சவப் பெட்டிகளை பெற்றுக் கொடுக்கவும் லுணுகலை பிரதேச சபையின் தவிசாளருடன் கலந்துரையாடி செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.