மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய திட்டம்!
மது போதையில் மற்றும் முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் இன்று முதல் ஒரு மாதத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளன.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பதுளை - பசறையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், மோட்டார் வாகன பரிசோதர்களை பயன்படுத்தி விபத்திற்குள்ளான பேருந்தின் தொழில்நுட்பம் தொடர்பில் பரிசோதிக்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்