பசறை விபத்தில் பலியானோரின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை!
பசறை - 13ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மரணித்தவர்களில் ஒருவரின் சடலம் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மரணித்தவர்களில் 13 பேரின் சரீரங்கள் பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரின் சரீரம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைகளுக்காக சரீரங்களில் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன் அவற்றின் முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மரண பரிசோதனைகளுக்காக பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சரீரங்களை பதுளை வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது