பசறை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு (காணொளி/படங்கள்)

பசறை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு (காணொளி/படங்கள்)

பதுளை - பசறை - 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

31 பேர் காயமடைந்துள்ளனர்.

காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, 13ஆம் கட்டைப் பகுதியில் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்