இலங்கையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - மக்களுக்கு விடுப்பட்ட கோரிக்கை
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளன சுகாதார வழிகாட்டிகளைச் சரியாகப் பின்பற்றுங்கள் என பொது மக்களிடம் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.
கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் மீண்டு அதிகரித்துள்ள நிலையில் சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு பொதுமக்கள் முகக் கவசம் அணிதல் உட்பட சகல சுகாதார வழிகாட்டி முறைகளைச் சரியாகப் பின்பற்றுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு இன்னும் மூன்று வாரங்கள் தான் உள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் கடைகளுக்குச் செல்லும் போது தனிமைப் படுத்தல் சட்டங்களைச் சரியாக கடைபிடிக்கவும், கைகளை சரியாகச் சுத்தம் செய்யவும்.
சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு விசேட சுகாதார வழிகாட்டிகள் வெளியிடவுள்ளது.
அத்தோடு பொலிஸ் விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்படவுள்ளமை குறித்து எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்