கொழும்பில் காணாமல் போன மாணவன்! தாயார் விடுத்துள்ள வேண்டுகோள்....
கொழும்பில் காணாமல் போன மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தருமாறு குறித்த மாணவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும் நேற்று காலை இரத்மலானையில் உள்ள வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் குறித்த மாணவன் காணாமல் போயுள்ளார்.
அல்டன் டெவோன் கென்னி என்ற 16 வயது மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்
இது தொடர்பில் மவுண்ட் லவினியா பொலிசில் முறைப்பாடளிக்கப்பட்டது.
மேலும் இவரை புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனர் என்றும் குறித்த தயார் தெரிவித்தார்.
எனது மகனைப் பற்றி இன்னும் எந்த தகவலும் இல்லை, ஆனால் உளவுத்துறை மற்றும் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் தெரிந்த எவரும் இருந்தால் உடனடியாக குடும்ப உறுப்பினர்கள் அல்லது பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அன்று காலை தனது மகன் பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும், ஆனால் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினான் என்றும் தாய் கூறினார்