பங்களாதேஷின் சுதந்திர பொன்விழாவில் பங்கேற்ற பிரதமர்
பங்களாதேஷின் தந்தையாக கருதப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(19) பிற்பகல் கலந்து கொண்டார்.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பங்களாதேஷை சென்றடைந்தார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷினாவின் அழைப்பிற்கு அமைய பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
விஜயத்தின் முதல் நாளான இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, பங்களாதேஷ் வெளிவிவகாரத்துறை அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, பங்களாதேஷ் சுதந்திர போரின்போது தங்களின் உயிரை இழந்த பங்களாதேஷ் மக்கள் செய்த தியாகங்கத்திற்கு கௌரவம் அளிப்பதாக பங்களாதேஷ் விஜயம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ தமது ட்விட்டர் கணக்கில் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது