சதொச மூலம் சலுகை விலையில் அரிசியை விநியோகிக்க முடியும் - அமைச்சர் பந்துல குணவர்தன

சதொச மூலம் சலுகை விலையில் அரிசியை விநியோகிக்க முடியும் - அமைச்சர் பந்துல குணவர்தன

சதொச ஊடாக சலுகை விலையில் அரிசியை விநியோகிக்கக்ககூடிய இயலுமை உள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜா-எல பகுதியில்இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சதொச நிறுவனத்தின்மூலம் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக அரிசியை விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

எவ்வாறான நிலைமை ஏற்பட்டாலும், நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி என்பன 100 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட மாட்டாது.

இதற்காக வெவ்வேறு மாற்று வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் சதொசையில் அரிசி விநியோகிக்கப்படுகின்றது.

இதேநேரம், பிரதேச மட்டங்களில் உள்ள மூவாயிரம் பிரதேச கூட்டுறவு கிளைகளின் மூலம், அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது