பேருந்து தரிப்பிடத்தில் சடலமாக மீட்கப்பட்ட பிக்கு (காணொளி)

பேருந்து தரிப்பிடத்தில் சடலமாக மீட்கப்பட்ட பிக்கு (காணொளி)

கண்டியில் போகம்பர பேருந்து தரிப்பிடத்தில் இன்று(19) மதியம்  பிக்கு ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கண்டி தலைமையக காவல்துறை பரிசோதகர் துசிதா ஹலங்கொட தெரிவித்தார்.

பேருந்து நிலையத்திலிருந்த மக்கள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வைத்திய அறிவுறுத்தல்களை பின்பற்றி சடலத்தை பரிசோதித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு மரணமடைந்த பிக்குவின் யாரென இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கண்டி காவல்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்