சிறைக்குள் சட்டவிரோதமாக கொண்டு செல்ல முற்பட்ட பெருந்தொகையான பொருட்கள் சிக்கின

சிறைக்குள் சட்டவிரோதமாக கொண்டு செல்ல முற்பட்ட பெருந்தொகையான பொருட்கள் சிக்கின

தடைசெய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியை சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு விறகு விநியோகிக்கும் பாரவூர்தியொன்றினை உபயோகித்து இவ்வாறு சிறைச்சாலைக்குள் பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று மாலை 3.30 மணியளவில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது  மிகவும் சூட்சமமாக தயாரிக்கப்பட்ட விறகு குற்றியொன்றில் வைக்கபட்டிருந்த 570 சுருட்டுகள், 7 கையடக்கத் தொலைபேசிகள், 3 மின்னேற்றிகள் (சார்ஜர்) மற்றும் 3 டேட்டா கேபல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பாரவூர்தியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அங்குணகொலபெலஸ்ஸ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அங்குணகொலபெலஸ்ஸ காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றன