கொரோனா அச்சம்- திருமலையில் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்!
திருகோணமலை நகரில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 68 பேர் கடந்த சில நாட்களில் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து என்.சி.வீதி, மத்தியவீதி, மூன்றாம் குறுக்குத் தெருவில் உள்ள 44 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணியளவில் இந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேசத்துக்குட்பட்ட திருகோணமலை நகரில் தொடர்ந்தும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கெள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை தொற்றாளர்கள் பணிபுரியும் வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு, அவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
