சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது!
வட்டவளை பிரதேசத்தில், ஹட்டன் ஓயாவிற்கு செல்லும் கிளை ஆறு ஒன்றில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, மாணிக்கக்கல் அகழ்விற்காக அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
ஹட்டன், நோர்வுட், பொகவந்தலாவை முதலான பகுதிகளை சேர்ந்த சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்