சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாறவுள்ள தொடருந்து நிலையங்கள்!

சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாறவுள்ள தொடருந்து நிலையங்கள்!

அடையாளம் காணப்பட்ட தொடருந்து நிலையங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க பிரதேசங்கள் என்பனவற்றை சுற்றுலா பயணிகளைக் கவரக்கூடிய இடங்களாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக இந்த வருடத்தில் 162 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பண்டாரவளை, நானுஓயா தொடருந்து நிலையங்களும், மன்னார், கற்பிட்டி மட்டக்களப்பு முதலான வரலாற்று முக்கியத்துவ மிக்க பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

சுற்றுலாத்துறை அமைச்சின் மூலம் இதுவரையில் 6 தொடருந்து நிலையங்கள் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடங்களாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொடருந்து திணைக்களத்துடன் இணைந்து சுற்றுலா பயணிகளை கவர்கூடிய தொடருந்து நிலையங்களாக அவை தரமுயர்த்தப்படவுள்ளன.

தொடருந்து நிலையங்களை அலங்கரித்தல், ஓய்வு அறைகளை அலங்கரித்தல், சுற்றுலா வசதியுடன் கூடிய மத்திய நிலையங்களை நிர்மானித்தல், நவீன இருப்பிட வசதிகளை வழங்குதல், இயற்கை கழிவறை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியன இந்தத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்