வழக்கு தொடரப்பட்டுள்ள போதிலும் ஆயிரம் ரூபா வழங்குவது உறுதி! - ஜீவன் தொண்டமான்

வழக்கு தொடரப்பட்டுள்ள போதிலும் ஆயிரம் ரூபா வழங்குவது உறுதி! - ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்ட நிறுவனங்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையிலும், கூறப்பட்டவாறு ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக தொழிற்சங்க ரீதியில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்