காவல்துறை ஊடகப் பணிப்பாளராக நிஹால் தல்துவ நியமனம்!

காவல்துறை ஊடகப் பணிப்பாளராக நிஹால் தல்துவ நியமனம்!

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ, காவல்துறை ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொடர்ந்தும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் பதவியில் கடமையாற்றிவருவார்.

அவர் இதற்கு மேலதிக காவல்துறையின் சட்டம்ஒழுங்கு பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது