புத்தாண்டு காலப்பகுதியில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை!

புத்தாண்டு காலப்பகுதியில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை!

எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வுடனும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியும் செயற்பட வேண்டும் என  காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மூவாயிரத்து 367 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்றவர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன