பங்களாதேஷ் அதிகாரிகளால் வரவேற்கப்பட்ட ஸ்ரீலங்கா பிரதமர்!

பங்களாதேஷ் அதிகாரிகளால் வரவேற்கப்பட்ட ஸ்ரீலங்கா பிரதமர்!

பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றுள்ளனர் என பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்கபந்து செய்க் முஜ்பர் ரஹ்மானின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வினையும், பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர கொண்டாட்டத்தையும் முன்னிட்டு அறிவித்துள்ள நிகழ்வில் ஸ்ரீலங்கா பிரதமர் அங்கு சிறப்பு உரை நிகழ்த் உள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அந்நாட்டின் தேசபிதாவாக கருதப்படும் பங்கபந்து ஷெய்க் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நாள் மற்றும் பங்களாதேஷ் நாட்டின சுதந்திர கொண்டாட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் அமீன், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வங்கி ஆளுநர் ஆகிய உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளது.

இதன் போது சுகாதாரம், விவசாயம், வியாபாராம் மற்றும் முதலீடு,பாதுகாப்பு , சமுத்திர பாதுகாப்பு, கல்வி மற்றும் சுற்றுலா என பல்துறைசார் விடயங்கள் தொடர்பில் இருதரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம் பெறவுள்ளன.

இவ்விஜயத்தின் போது இருதரப்பினருக்கும் இடையில் உயர்மட்ட தலைவர்களை மையப்படுத்தி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை இலங்கைக்கும் பங்களாதேஷ் நாட்டுக்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது