நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி, களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து 186 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது