அயோத்தி இராமர் கோயிலுக்கு சீதாஎலியவிலிருந்து அனுப்பப்படும் கல்!
இந்தியாவின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டு வரும் இராமர் கோயிலுக்கு நுவரெலியா சீதாஎலிய பகுதியிலுள்ள சீதையம்மன் ஆலய மூலஸ்தானத்திலிருந்து பெறப்பட்ட கல் ஒன்றை அனுப்பி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதற்கான பூஜை நிகழ்வுகள் கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி ஆலயத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, நுவரெலியா சீதையம்மன் ஆலய பரிபாலன சபைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், மயூரபதி ஆலய அறங்காவலர் சபைத்தலைவர், இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கல்லை சீதையம்மன் ஆலய பரிபாலன சபைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இந்திய உயர்ஸ்தானிகர் கோபாலிடம் கையளித்துள்ளார்
